மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா + "||" + Dharna ignores classes of King's College students in Pudukkottai

புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா

புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா
புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் மன்னர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் வகுப்பறையில் போதுமான மின்சார வசதி இல்லை. கல்லூரியின் சுற்றுப்புறத்தை சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும். கழிப்பறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். அதிகப்படியாக உள்ள தேர்வு கட்டணங்களை குறைக்க வேண்டும். அரசு பஸ்கள் கல்லூரி அருகே நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உதவித்தொகை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


இலவச பஸ்பாஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக நாட்டுநலப்பணி திட்டத்திற்கு அழைத்து செல்லவில்லை. எனவே இந்த ஆண்டு நாட்டுநலப்பணி திட்டத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். மாணவர்களுக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லை. கிடைக்கும் தண்ணீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்படுவதில்லை என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறு முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கல்லூரி முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் தர்ணா
ஆட்டுப்பாறை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தண்ணீர் கிடைக்கவில்லை.
2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் சங்கத்தினர் தர்ணா
5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
3. கூட்டுறவு வங்கி முன் குடும்பத்துடன் வாலிபர் தர்ணா இறந்த தந்தைக்கான பணப்பலன்களை வழங்கக்கோரிக்கை
மணப்பாறை அருகே இறந்த தந்தைக்கான பணப்பலன்களை வழங்கக்கோரி கூட்டுறவு வங்கி முன் வாலிபர் ஒருவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ‘மாணவர்கள் நிலவுக்கு செல்லும் வாய்ப்பை இஸ்ரோ ஏற்படுத்துகிறது’ நாசா விண்வெளி வீரர் பேச்சு
வருங்காலத்தில் மாணவர்கள் நிலவுக்கு செல்லும் வாய்ப்பை இஸ்ரோ ஏற்படுத்தி வருகிறது என்று நாசா விண்வெளி வீரர் கூறினார்.
5. குப்பைகளை அகற்ற என்.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடித்த கருவி
குப்பைகளை அகற்ற என்.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடித்த கருவி திருச்சி மாநகராட்சியிடம் ஒப்படைப்பு.

அதிகம் வாசிக்கப்பட்டவை