நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் காலதாமதம் செய்வதன் மூலம் காங்கிரசின் பிரதிநிதியாக சபாநாயகர் மாறிவிட்டார் ஷோபா எம்.பி. குற்றச்சாட்டு
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் காலதாமதம் செய்வதன் மூலம் காங்கிரசின் பிரதிநிதியாக சபாநாயகர் ரமேஷ்குமார் மாறிவிட்டார் என ஷோபா எம்.பி. குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பா.ஜனதாவை சேர்ந்த ஷோபா எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
சட்டசபை கூட்டத்தொடர் 12-ந் தேதி தொடங்கியதும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்திருந்தார். அதுதொடர்பாக சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 18-ந் தேதி (அதாவது நேற்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 3 கட்சிகளும் சம்மதம் தெரிவித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விடாமல் தேவையில்லாத விவாதங்கள் பற்றி பேசி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் காலதாமதம் செய்கின்றனர்.
16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதன் மூலம் இந்த கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்னும் காலஅவகாசம் கேட்பது ஏன்?. அதற்கான அவசியமே இல்லை.
எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஜனநாயகத்திற்கு எதிராகவும், விதிமுறைகளை மீறியும் அவர் நடந்து கொள்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விடாமல் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் காலதாமதம் செய்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் இருக்கிறார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக சபாநாயகர் ரமேஷ்குமார் மாறி விட்டார்.
மனிதாபிமானபடியும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் சபாநாயகர் நடந்து கொள்கிறார். கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்ட பின்பும் முதல்-மந்திரி பதவியில் குமாரசாமி இருப்பதற்கு தகுதியில்லை. உடனே அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு ஷோபா எம்.பி.கூறினார்.

Related Tags :
Next Story