மாவட்ட செய்திகள்

கடம்பூர் மலைப்பகுதியில் தொண்டை அடைப்பான் நோய்க்கு ஒரே நாளில் 10 பேர் பாதிப்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை + "||" + Sore throat disease 10 people affected in a single day Treatment in the hospital

கடம்பூர் மலைப்பகுதியில் தொண்டை அடைப்பான் நோய்க்கு ஒரே நாளில் 10 பேர் பாதிப்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கடம்பூர் மலைப்பகுதியில் தொண்டை அடைப்பான் நோய்க்கு ஒரே நாளில் 10 பேர் பாதிப்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கடம்பூர் மலைப்பகுதியில் ஒரேநாளில் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 10 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை பகுதியில் மல்லியம்மன் துர்க்கம் என்ற ஊர் உள்ளது. இந்த மலைக்கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவன் காசி பிரசாத் (வயது 10) தொண்டை அடைப்பான் நோய் தாக்கி இறந்தான். மேலும் அதே ஊரை சேர்ந்த கவுதம் (9), கவிப்பிரியா (9) ஆகிய 2 பேரும் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தியூர் ஊரை சேர்ந்த சீரங்கன் (17) என்ற பிளஸ்–2 மாணவரும் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளார்கள். அங்குள்ளவர்களை பரிசோதித்து தடுப்பூசி போட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடம்பூர் மலைக்கிராமத்தில் மேலும் 10 பேரை தொண்டை அடைப்பான் நோய் தாக்கியுள்ளது. கவின் (12), பரமேஷ்வரி (14), பூஜா (14), கோபிகா (13), அஸ்வதா (14), ஜனனி (13), கவி தர்ஷினி (14), அருண்குமார் (14), கார்த்திகேயன் (13), தன ஹரினி (13) உள்ளிட்ட பள்ளி மாணவ–மாணவிகள் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து 10 பேரும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ குழுவினர் கிராமங்களில் முகாமிட்டு தடுப்பூசிகள் போட்டு வந்த போதிலும் ஒரே நாளில் 10 பேர் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சஞ்சய் ராவத்துடன் சரத்பவார், உத்தவ் தாக்கரே சந்திப்பு
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சஞ்சய் ராவத்தை சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் சந்தித்தனர்.
2. அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பு ஆட்டோவில் பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது
சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி முன்பு, ஆட்டோவில் பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
3. அரசு ஆஸ்பத்திரியில் 60–க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி பொருத்தி உள்ளோம் டீன் தகவல்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 60–க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி பொருத்தி உள்ளதாக டீன் பாலாஜிநாதன் கூறினார்.
4. ஆசனூர் அருகே தொழிலாளியை துதிக்கையால் யானை தூக்கி வீசியது; படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
ஆசனூர் அருகே தொழிலாளியை யானை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
5. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு: தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட ஊசி மருந்தை திருப்பி அனுப்ப உத்தரவு
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு போடப்பட்ட ஊசியால் குளிர்காய்ச்சல் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்ட ஊசி மருந்தை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.