லாலாபேட்டை அருகே லாரியை மறித்து டிரைவரிடம் பணம் பறிப்பு 2 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Laurie overtakes the truck
Cops trespass on 2 drivers to cash in on driver
லாலாபேட்டை அருகே லாரியை மறித்து டிரைவரிடம் பணம் பறிப்பு 2 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
லாலாபேட்டை அருகே லாரியை மறித்து டிரைவரிடம் பணம் பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லாலாபேட்டை,
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் நேற்று முன்தினம் இரவு அரியலூரில் இருந்து லாரியில் சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை கரூர் மாவட்டம் திம்மாச்சிபுரம் புத்து கோவில் பகுதி வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென லாரியை நிறுத்தினர்.
பணம் பறிப்பு
இதையடுத்து லாரி டிரைவர் அவர்களிடம் ஏன் லாரியை நிறுத்தினீர்கள் என்று கேட்டார். அதற்குள் 2 வாலிபர்களும் கத்தியை காட்டி மிரட்டி, மாரீஸ்வரனிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தை 500-யை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரீஸ்வரன் திருடன்... திருடன்... என சத்தம் பேட்டார். அதற்குள் 2 வாலிபர்களும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மாரீஸ்வரன் லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூரில் தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
தெருவிளக்கு அமைத்ததாக போலி பில் மூலம் பணம் கையாடல் செய்த வழக்கில் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஒரத்தநாடு அருகே வீடு புகுந்து அக்காள்-தங்கையிடம் அரிவாளை காட்டி மிரட்டி 8½ பவுன் சங்கிலியை டவுசர் கொள்ளையர்கள் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.