ராசிபுரம், திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ராசிபுரம், திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 July 2019 9:30 PM GMT (Updated: 20 July 2019 8:05 PM GMT)

ராசிபுரம், திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம், 

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவும், காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறவும் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை அம்மாநில போலீசார் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக் நவீத் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் பாச்சல் சீனிவாசன், நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு முரளி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மகேஸ்வரி, நாமகிரிபேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, நாமகிரிபேட்டை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் இளங்கோ, புதுச்சத்திரம் வட்டார தலைவர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பிரியங்கா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், பா.ஜனதா அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதே போல நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்செங்கோடு அண்ணாசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமை தாங்கினார். மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் லோக நாதன் வரவேற்றார்.

இதில், மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, நெசவாளர் அணி மாநில துணைத்தலைவர் கதிரேசன், மாவட்ட துணைத்தவைர் சிவநேசன், திருச்செங்கோடு வட்டார தலைவர் லோகநாதன், நகர தலைவர் செல்வகுமார், எலச்சிபாளையம் வட்டார தலைவர் ராஜலிங்கம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதீஷ் தனகோபால் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொது செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Next Story