மாவட்ட செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில்தொழிலாளி உள்பட 2 பேர் சாவு + "||" + In different accidents Two workers, including a worker, died

வெவ்வேறு விபத்துகளில்தொழிலாளி உள்பட 2 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில்தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
மோகனூர், 

மோகனூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது 42). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் மோகனூருக்கு சென்றார். நவலடியான் கோவில் காடு அருகே ஒருவளைவுபகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர் அருகே உள்ள கோப்பணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (60). இவர் அதே பகுதியில் உள்ள சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, வீரப்பன் சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே வீரப்பன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் பலி
பெரம்பலூர் புறநகர், துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முத்துகுமார்(வயது 39).
2. ஜோலார்பேட்டை அருகே விபத்தில் தொழிலாளி பலி
ஜோலார்பேட்டையை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 23), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.
3. விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க போக்குவரத்துத்துறை முனைப்போடு செயல்படுகிறது; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க போக்குவரத்துத்துறை முனைப்போடு செயல்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
4. சேலத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்து: ஜவ்வரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் பலி
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் ஜவ்வரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
5. புளிய மரத்தில் கார் மோதி விபத்து: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர், டிரைவர் பலி
புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர், டிரைவர் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.