சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து உறுதியாக தண்ணீர் திறக்கப்படும் அமைச்சர் காமராஜ் பேட்டி
சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து உறுதியாக தண்ணீர் திறக்கப்படும் என திருவாரூரில் அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்,
ரேஷன் கடைகளில் எந்தவித தங்கு தடையும் இன்றி தகுதியுள்ள குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் உறுதியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விலையில்லா அரிசி திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அனைவருக்குமான உணவு பாதுகாப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. அத்தியாவசிய பொருட்களும் தேவைக்கேற்ப அனைவருக்கும் தொடர்ந்து நிச்சயம் வழங்கப்படும்.
தண்ணீர் திறக்கப்படும்
சம்பா சாகுபடிக்கு மேட்டூர்் அணையில் இருந்து உறுதியாக தண்ணீர் திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணை திறப்பதற்கான தகுந்த கால நேரமாக இருக்காது. எனவே சம்பா சாகுபடிக்கு உரிய காலத்தில் மேட்டூர் அணை திறப்பதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களை பாதுகாக்கும் வகையில் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Tags :
Next Story