திருவாரூர் அருகே ஏணியில் இருந்து தவறி விழுந்து இந்து முன்னணி பிரமுகர் சாவு போலீசார் விசாரணை

திருவாரூர் அருகே ஏணியில் இருந்து தவறி விழுந்து இந்து முன்னணி பிரமுகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்,
திருவாரூர் திருமஞ்சன வீதி பகுதியை சேர்ந்த சின்னு மகன் காசி என்கிற நாகராஜன் (வயது 30). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் திருவாரூர் அருகே வேலங்குடியில் உள்ள ஒரு வீட்டில் ஏணியில் நின்று பெயிண்டு அடித்துக் கொண்டிந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி நாகராஜன் ஏணியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்து முன்னணி பிரமுகர்
இதுகுறித்து நாகராஜனின் அண்ணன் பிரபுராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நாகராஜன் திருவாரூர் இந்து முன்னணியில் நகர செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story