ஆவுடையார்கோவில் அருகே பெரிய அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா


ஆவுடையார்கோவில் அருகே பெரிய அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா
x
தினத்தந்தி 22 July 2019 4:00 AM IST (Updated: 22 July 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீழிமங்கலம் கிராமத்தில் உள்ள பெரிய அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.

ஆவுடையார்கோவில்,

ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீழிமங்கலம் கிராமத்தில் உள்ள பெரிய அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மண்னால் செய்யப்பட்ட குதிரைகளுக்கு வீழிமங்கலம் முருகன் கோவிலில் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் குதிரைகளை தோளில் சுமந்து சென்று குதிரை பொட்டல் என்னும் இடத்தில் இறக்கி வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து வீழிமங்கலம் பெரிய அய்யனார் கோவிலில் இறக்கி வைத்து அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story