வடகாடு அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வடகாடு அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள வானக்கண்காடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னமலையான். இவரது மகன் திருநாவுக்கரசு (வயது 38). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு பக்கத்து ஊரில் நடைபெற்ற கபடி போட்டியை காண் பதற்காக சென்றார்.
கபடி போட்டி முடிவடைந்ததும், நள்ளிரவில் வீட்டுக்கு வந்தார். பின்னர் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென்று சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்கு வெளியே வந்துபார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து திருநாவுக்கரசு மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைத்தனர்.
யாரோ மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து திருநாவுக்கரசு வடகாடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள், தடவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது உள்பட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை வலைவீசிதேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story