வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்: ரேஷன் பொருட்கள் வழங்குவதில் எந்த மாற்றமும் கிடையாது அமைச்சர் பேட்டி


வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்: ரேஷன் பொருட்கள் வழங்குவதில் எந்த மாற்றமும் கிடையாது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 22 July 2019 11:00 PM GMT (Updated: 22 July 2019 6:20 PM GMT)

வதந்திகளை நம்ப வேண்டாம். ரேஷன் பொருட்களை வழங்குவதில் எந்த மாற்றமும் கிடையாது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடு இல்லாத தகுதியுள்ளவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்-அமைச்சர் கூறியதை செயல்படுத்தும் வகையில் இதுவரை 8 ஆயிரத்து 300 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை, நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் 5 வருடங்களுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு வகைமாற்றம் செய்வது, வேறு இடத்தில் வீடுகட்டி கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தகுதி உள்ளவர்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

மாற்றம் இல்லை

பொதுவினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பழைய முறையே பின்பற்றப்படும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story