படைப்புழு தாக்குதலுக்கு இழப்பீடு: மக்காச்சோளப் பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்


படைப்புழு தாக்குதலுக்கு இழப்பீடு: மக்காச்சோளப் பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

படைப்புழுவின் தாக்குதலால் ஏற்படும் இழப்பீட்டை தடுக்க மக்காச்சோளப் பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் கூறினார்.

அரியலூர்,

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கு மக்காச்சோளப் பயிரில் எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2018-19-ம் ஆண்டில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவின் தாக்குதலால் மகசூல் இழப்பு பெருமளவில் ஏற்பட்டது.

நடப்பு காரீப் பருவத்தில் இறவையில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவும், படைப்புழுவினால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பிற்கு ஏற்ப நிவாரணம் வழங்க ஏதுவாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள் பொது இ-சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறாக மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி ஆகும். எனவே விவசாயிகள் இறுதி நேர அவசரத்தை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடுத் தொகை செலுத்தி தங்களது மக்காச்சோளப் பயிரினை முன்கூட்டியே காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிர் காப்பீடுத் தொகையில், விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.446 மட்டும் காப்பீடுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டண தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொது இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். பொது இ-சேவை மையத்தில் பயிர் காப்பீடு செய்யும் போது சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் இயற்கை பாதிப்பு ஏற்படும் முன்னரே பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் சேதம் ஏற்பட்ட பிறகு, அப்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாது. எனவே தொடர் பாதிப்புள்ளாகும் பகுதியிலுள்ள விவசாயிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந் தேதிக்குள் உடன் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

காரீப் மக்காச்சோளப் பயிருக்கு தா.பழூர் வட்டாரத்தில் ஸ்ரீபுரந்தான் (வடக்கு), ஸ்ரீபுரந்தான் (தெற்கு), சாத்தம்பாடி, மணகெதி, உல்லியக்குடி, வெண்மான்கொண்டான் (மேற்கு), வெண்மான்கொண்டான் (கிழக்கு), பருக்கல் (மேற்கு), பருக்கல் (கிழக்கு), சுத்தமல்லி, கீழநத்தம், அம்பாப்பூர், கடம்பூர், கோவிந்தபுத்தூர், நடுவலூர் (மேற்கு), நடுவலூர் (கிழக்கு), உடையவர்தீயனூர், வேம்புக்குடி, தா.பழூர், உதயநத்தம் (கிழக்கு), உதயநத்தம் (மேற்கு), இருக்கையூர், காரைக்குறிச்சி, நாயகனைப்பிரியாள், கோடங்குடி (தெற்கு), கோடங்குடி (வடக்கு), அணைக்குடம், சோழமாதேவி, இடங்கன்னி ஆகிய அறிக்கை செய்யப்பட்ட கிராமங்களும், ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் இளையபெருமாள்நல்லூர், பாப்பாக்குடி (தெற்கு), காட்டகரம் (வடக்கு), தழுதாழைமேடு, குந்தவெளி(கிழக்கு), குந்தவெளி (மேற்கு), குருவாலப்பர் கோவில், அங்கராயநல்லூர்(கிழக்கு), அங்கராயநல்லூர்(மேற்கு), த.சோழன்குறிச்சி(தெற்கு), உடையார்பாளையம்(மேற்கு), தேவமங்கலம், வாணதிரையான்பட்டினம், சூரியமணல், இடையார், தத்தனூர்(கிழக்கு), தத்தனுார் (மேற்கு), த.சோழன்குறிச்சி (வடக்கு), உடையார்பாளையம்(கிழக்கு), பிலிச்சிக்குழி ஆகிய அறிக்கை செய்யப்பட்ட கிராமங்களும்.

ஆண்டிமடம் வட்டாரத்தில் பெரியகிருஷ்ணாபுரம், ராங்கியம், ஸ்ரீராமன், திருக்களப்பூர், ஆத்துக்குறிச்சி, ஓலையூர், அழகாபுரம், மேலூர், கூவத்தூர்(வடக்கு), அய்யூர், இலையூர்(மேற்கு), அணிக்குதிச்சான்(வடக்கு), வரதராஜன்பேட்டை, விளந்தை(தெற்கு), சிலுவைச்சேரி, விளந்தை (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), குவாகம், மருதூர், வாரியங்காவல், தேவனூர், காட்டாத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), ஆண்டிமடம் ஆகிய அறிக்கை செய்யப்பட்ட கிராமங்களும் 2019-20-ம் ஆண்டில் காரீப் பருவத்திறக்கான காப்பீடிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story