நாகர்கோவில் அருகே பூட்டிய ரெயில்வே கேட்டை திறக்க முடியாமல் ஊழியர்கள் தவிப்பு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


நாகர்கோவில் அருகே பூட்டிய ரெயில்வே கேட்டை திறக்க முடியாமல் ஊழியர்கள் தவிப்பு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 July 2019 11:00 PM GMT (Updated: 24 July 2019 2:59 PM GMT)

நாகர்கோவில் அருகே பூட்டிய ரெயில்வே கேட்டை திறக்க முடி யாமல் ரெயில்வே ஊழியர்கள் தவித்தனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பார்வதிபுரத் தில் இருந்து கணியாகுளம் செல்லும் சாலையின் இடையே இலந்தையடி என்ற பகுதியில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த நிலை யில் நேற்று காலை 9.30 மணி அளவில் இந்த வழியாக சென்ற ரெயிலுக்காக கேட் மூடப்பட்டது. ரெயில் சென்ற பிறகு அங்குள்ள ஊழியர்கள் கேட்டை திறக்க முயன்றபோது திறக்க முடியவில்லை. திடீரென ஏற்பட்ட பழுதின் காரணமாக கேட்டை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த கேட் வழியாகத்தான் இலந்தையடி, கணியாகுளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த வர்கள் சென்று வருவது வழக்கம். பழுது ஏற்பட்டதால் ரெயில்வே கேட்டின் இரு புறமும் ரெயில் தண்டவாளத் தை கடந்து செல்வதற்காக இருசக்கர வாகனங்களிலும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களிலும, மினி பஸ், லாரி போன்ற வாகனங்களிலும் ஏராளமானோர் காத்திருந் தனர். நேரம் ஆகிக்கொண் டிருந்ததே தவிர ரெயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனால் ரெயில்வே கேட்டின் இருபுறமும் நின்றவர்கள் சில கி.மீ. தூரம் சுற்றி மாற்றுப்பாதையில் சென்றனர்.

இதற்கிடையே ரெயில்வே கேட் கீப்பர்கள் அதிகாரி களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரெயில்வே கேட்டில் ஏற்பட்டிருந்த பழுதை சரிசெய்தனர். இத னால் மதியம் 12.30 மணிக்கு பிறகு பழுதான ரெயில்வே கேட் சரி செய்யப்பட்டது. இதனால் 3 மணி நேரம் அந்த  சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகளும், பள்ளி– கல் லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகளும் அவதிக்குள் ளாகினார்கள்.

Next Story