நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியதால் பெண் உள்பட 2 பேர் தற்கொலை முயற்சி; போலீசார் விசாரணை


நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியதால் பெண் உள்பட 2 பேர் தற்கொலை முயற்சி; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 July 2019 3:30 AM IST (Updated: 25 July 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

கணவர் பிரிந்து சென்ற நிலையில், தொழிலாளி ஒருவருடன் தொடர்பு படுத்தி நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியதால், பெண் உள்பட 2 பேர் தற்கொலைக்கு முயன்றனர்.

தேனி,

தேனி அல்லிநகரம் ரத்தினம் நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 38). இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பையா தனது மனைவியை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கஸ்தூரி குடும்ப செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், அவரையும், காந்திநகரை சேர்ந்த கூலித்தொழிலாளியான சுரேஷ் (40) என்பவரையும் தொடர்புபடுத்தி, நடத்தையில் சந்தேகப்பட்டு சிலர் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், ரத்தினம் நகரில் உள்ள கஸ்தூரி வீட்டில் வைத்து அவரும், சுரேசும் பாலில் தூக்கமாத்திரைகள் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கஸ்தூரி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story