நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்


நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 July 2019 10:45 PM GMT (Updated: 24 July 2019 7:02 PM GMT)

நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் திருவாரூர் புதிய பஸ் நிலையத்தி்ல் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மரக்கன்றுகள் நடுவதை தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நீர்் மேலாண்மை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீரை செறிவூட்டும் விதமாக குடியிருப்பு வீடுகளில் உறிஞ்சி குழாய் அமைத்தல், மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகராட்சி சார்பில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் உணவுத்துறை அமைச்சர் ஆர்்.காமராஜ் கலந்து கொண்டு் மரக்கன்றுகள் நடுவதை தொடங்கி வைத்தார். இதில் 300 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, உதவி கலெக்டர் முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், நகராட்சி ஆணையர் சங்கரன் நன்றி கூறினார். 

Next Story