மன்னார்குடி அருகே செல்போன் டவரில் ரூ.25 ஆயிரம் ‘பேட்டரிகள்’ திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


மன்னார்குடி அருகே செல்போன் டவரில் ரூ.25 ஆயிரம் ‘பேட்டரிகள்’ திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 July 2019 3:30 AM IST (Updated: 26 July 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே செல்போன் டவரில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வல்லான்குடிகாடு கிராமத்தில் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது.

அந்த டவரில் கோட்டூரை சேர்ந்த கலைமணி என்பவர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கலைமணி, டவரில் உள்ள ஜெனரேட்டருக்கு டீசல் ஊற்றுவதற்காக சென்றார். அப்போது அங்கு இருந்த 24 பழைய பேட்டரிகளை காணவில்லை. மர்ம நபர்கள் அவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.

ரூ.25 ஆயிரம்

திருட்டு போன பழைய பேட்டரிகளின் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. பழைய பேட்டரிகள் அனைத்தும் 10 நாட்களுக்கு முன்பு டவரில் புதிய பேட்டரிகள் மாட்டியபோது கழற்றி வைக்கப்பட்டவை ஆகும்.

இதுகுறித்து கலைமணி பரவாக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story