சரியாக படிக்காததால் மாணவனை, ஆசிரியர்கள் தாக்கியதாக புகார் மருத்துவமனையில் அனுமதி
சரியாக படிக்காததால் மாணவனை, ஆசிரியர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் காயமடைந்த மாணவன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கம்பிளியம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பிளஸ்-1 படித்து வரும் ஒரு மாணவன் பாடங்களை சரிவர படிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் அந்த மாணவனை பள்ளி ஆசிரியர்கள் சிலர் கம்பால் அடித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவன் வீட்டுக்கு வந்து தற்கொலைக்கு முயன்றான்.
இதையறிந்த பெற்றோர் அவனை தடுத்தனர். பின்னர் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் பேசினர். அப்போது தங்கள் மகன் இனிமேல் முறையாக பாடங்களை படிப்பான் என்று கூறினர். அதன் பின்னர் பள்ளிக்கு சென்ற மாணவனை மீண்டும் ஆசிரியர்கள் அடித்ததாக புகார் எழுந்தது. மேலும் ஆசிரியர்கள் தாக்கியதில் மாணவனுக்கு கை, முதுகில் காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து மாணவனை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவனுடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் மருத்துவமனைக்கு வந்து மாணவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் தாக்கியதால் தனக்கு காயம் ஏற்பட்டதாக அந்த மாணவன் தெரிவித்தான். அதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் தாக்கப்பட்டது குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் கேட்ட போது, அந்த மாணவன் பள்ளியில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபட்டு வந்தான்.
இதற்காக பலமுறை அவனை கண்டித்துள்ளோம். ஆனால் அவனை கம்பால் தாக்கியதில்லை. மன்னிப்பு கடிதங்கள் மட்டுமே இதுவரை எழுதி வாங்கியுள்ளோம். அதன்படியே கடந்த வாரத்திலும் அவன் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டான். இதையடுத்து அவனது பெற்றோரை அழைத்துவரும்படி கூறினோம். ஆனால் அவன் காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அது அவனாகவே ஏற்படுத்திக்கொண்ட காயமாக கூட இருக்கலாம் என்றனர்.

Related Tags :
Next Story