மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் மீது வழக்கு


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 July 2019 4:28 AM IST (Updated: 27 July 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பவானி,

பவானி பழைய பஸ்நிலையம் அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி நேற்று காலை இந்து முன்னணி நிர்வாகிகள் பெற்றோர்களுடன் சென்று முற்றுகையிட்டார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானி போலீசார் அங்கு சென்று பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போராட்டக்காரர்கள் சமாதானம் ஆகவில்லை. அங்கிருந்து சென்று ஆசிரியர் குறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்கள். அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தவும் முயன்றனர். ஆனால் விசாரணைக்கு பயந்து பள்ளியில் இருந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இதனால் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story