டெல்டா மாவட்டங்களில் 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிப்பு நாற்றங்காலில் கருகும் நாற்றுகள்
டெல்டா மாவட்டங்களில் 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிப்பால் நாற்றங்காலில் நாற்றுகள் கருகி வருகின்றன.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு முன்பு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
குறுவை பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும், கர்நாடகம் தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்து விடாததாலும், குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழகத்திலும் வடகிழக்குப் பருவமழை பொய்த்து விட்டது.
குறுவை சாகுபடி பாதிப்பு
இந்த ஆண்டும் தண்ணீர் மேட்டூர் அணையில் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 1¼ லட்சம் எக்டேர் குறுவை சாகுபடி நடைபெறும். தற்போது 1 லட்சம் எக்டேருக்கும் குறைவாகவே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இருந்து உரிய தண்ணீர் வந்து மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என்று ஆற்றுபாசன பகுதிகளில் பல்வேறு இடங்களில் நாற்றங்காலும் தயார் செய்யப்பட்டன. ஆனால் தண்ணீர் திறக்கப்படாததால் ஏராளமான ஏக்கரில் நடவு செய்யப்படவில்லை. இதனால் நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் வளர்ந்து நடவு செய்யமுடியவில்லை.
கருகிய நாற்றுகள்
கண்டியூர், கா.கோவிலூர், கல்லணைக்கால்வாய் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் பாசன வாய்க்காலையொட்டியுள்ள வயல்களிலும் நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் முற்றிய நிலையில் காணப்படுகின்றன. பல இடங்களில் நாற்றுகள் நடவு செய்வதற்கு வழியில்லாமல் கருகிய நிலையில் காணப்படுகின்றன. சில பகுதிகளில் நாற்றுகள் முற்றி கதிர்வந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இவ்வாறு பல ஏக்கரில் நாற்றுகள் வீணாகி விட்டது. அவ்வாறு கருகிய நாற்றுகளை ஆடு, மாடுகள் மேயும் நிலை தான் காணப்படுகின்றன.

Related Tags :
Next Story