புதிய கல்வி கொள்கை திட்டத்தை வரவேற்கிறோம் தனியார் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் பேட்டி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை- மும்மொழி கல்வி திட்டத்தையும் வரவேற்கிறோம் என்று தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
பெரம்பலூர்,
தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் மாநாடு பெரம்பலூரில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் ஸ்ரீதர், மாநில பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் நிர்மலா சந்திரசேகர், பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியம், அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தலைவர் ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பயிலும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளுக்கு வழங்கும் பயிற்சிகளும், மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகளும் வழங்கிட வேண்டும். மேலும் அரசு பள்ளிக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் தனியார் பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு சொத்துவரி, தொழில்வரி கேட்பதை அரசு கைவிட வேண்டும். தனியார் பள்ளி வாகனங்களுக்கு அதிகபட்சமாக காப்பீடு தொகை வசூலிப்பதை பாதியாக குறைக்க வேண்டும்.
தரம் உயர்த்த வேண்டும்
நர்சரி பிரைமரி பள்ளிகளை, நடுநிலைப்பள்ளியாகவும், மெட்ரிகுலேசன் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பழைய பள்ளி கட்டிடங்களுக்கு டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ., எல்.பி.ஏ. அனுமதி பெற வேண்டும் என்ற அரசின் ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விதிவிலக்கு வழங்கியதை ஏற்று அரசாணை வெளியிட வேண்டும். அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களுக்கும் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்த வேண்டும் என்கிற தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். இந்தியாவில் 20 வகையான கல்வித் திட்டம் இருக்கிறது. அதில், பல்வேறு குறைபாடுகள் இருக்கிறது அதை நிவர்த்தி செய்வதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையையும், மும்மொழி கல்வித் திட்டத்தையும் எங்க சங்கம் வரவேற்கிறது தமிழகத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளுக்கு உடனடி அங்கீகாரம் வழங்க வேண்டும் இனிமேல் தமிழகத்தில் எந்த ஒரு புதிய பள்ளிக்கும் புதிதாக அங்கீகாரம் வழங்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் மாணிக்கம் (பெரம்பலூர்), பெரியசாமி (அரியலூர்) மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story