கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி லாயல் மில் காலனியைச் சேர்ந்தவர் சன்னாசி. இவருடைய மகன் மாரியப்பன். இவர் அப்பகுதியில் வாடகை கட்டிடத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இருந்து மருந்து முக்கிய தீக்குச்சிகளை வாங்கி வந்து, அவற்றை பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்புவது வழக்கம்.
நேற்று காலையில் வழக்கம்போல் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள், அங்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போதுதரையில் கிடந்த தீக்குச்சி மருந்து கழிவுகளில் உராய்வு காரணமாக தீப்பிடித்து, மளமளவென்று நாலாபுறமும் தீ வேகமாக பரவியது.
இதனால் தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் அலறியடித்தவாறு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்புநிலைய அலுவலர் இசக்கி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மருந்து முக்கிய தீக்குச்சிகள், அட்டை பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story