இளைஞர்களின் சூப்பர் ஸ்டார் அப்துல் கலாம்: பறவைகளுக்காக மரக்கன்றுகள் நடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது நடிகர் விவேக் பேச்சு
இளைஞர்களின் சூப்பர் ஸ்டார் அப்துல் கலாம் என்றும், பறவைகளுக்காக 1,000 மரக்கன்றுகள் நடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் நடிகர் விவேக் பேசினார்.
சென்னை,
மறைந்த ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி ஈஷா பசுமை கரங்கள், பசுமை கலாம் அமைப்பு மற்றும் மாபா அறக்கட்டளை சார்பில் சென்னையை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு ஏரி கரையில் பறவைகளுக்காக மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
‘பறவைகளுக்கு கிளை கொடுப்போம்’ என்ற கருப்பொருளில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், நடிகர் விவேக், ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ரப்யா-, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், ஆவடி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனிசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
பறவைகளுக்கு வாழ்விடங்களை உருவாக்கி தருவதற்காக வேம்பு, புங்கன், இயல்வாகை, ஜாமுன், பாதாம், இழுப்பை உள்பட பழ மரங்கள், பூ மரங்கள் மற்றும் நிழல் தரும் மரங்கள் என 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசும்போது, ‘விடுமுறை நாளிலும் மரக்கன்றுகள் நடுவதற்காக பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்களை பாராட்டுகிறேன்.
மரம் நடுவதோடு நின்று விடாமல், இது என்னுடைய மரம் என்று கருதி மாணவர்கள் நட்ட மரத்தை மாணவர்களே பராமரிக்க முன்வரவேண்டும். ஏரிகளை மீட்டெடுக்கும் பணியில் மாணவர்கள் ஒன்றிணைந்து களம் இறங்க வேண்டும். அனைவரும் சேர்ந்து தோள் கொடுப்போம். பறவைகளுக்காக கிளை கொடுப்போம்’ என்றார்.
நடிகர் விவேக் பேசியதாவது:- ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நம்முடைய அப்துல்கலாம் ஐயா தான். அவருடைய நினைவு நாளில் ஆவடியில் பறவைகளுக்காக 1,000 மரக்கன்றுகள் நடுவது மகிழ்ச்சியாக உள்ளது. 30 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு எனக்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், ஈஷா பசுமை கரங்கள் அமைப்போ வெகு குறுகிய காலத்தில் 3½ கோடி மரக் கன்றுகளை நட்டுள்ளது.
தனி ஆளாக இருந்தால் இதை சாதிப்பது மிக கடினம். ஈஷா போன்ற அமைப்புகளால் தான் இந்த பணிகளை மிக விரைவில் செய்து முடிக்க முடியும். அவர்கள் நட்டுள்ள ஆயிரம் மரக்கன்றுகளும் நன்கு பராமரிக்கப்பட்டு சிறப்பாக வளர்க்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அரிவாளும், பட்டாக்கத்தியும் எடுத்து திரிபவர்கள் எல்லாம் மாணவர்கள் கிடையாது. கடும் வெயிலும் சுற்றுச்சூழலுக்காக மரக்கன்றுகளை நடுவதற்கு கடப்பாரை பிடிக்கும் நீங்கள் தான் உண்மையான மாணவர்கள். நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சில் ஈஷா அமைப்பு, மாபா அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வலர்கள், ஆவடி நேஷனல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், ஆவடி வாக்கர்ஸ் கிளப் உறுப்பினர்கள், மகாலட்சுமி பொறியியல் கல்லூரி, செயின்ட் பீட்டர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளி, மகேந்திரா டெக் பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story