ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 29 July 2019 4:30 AM IST (Updated: 29 July 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தலைஞாயிறில் பிரதமருக்கு தபால் அனுப்பு போராட்டம் நடைபெற்றது.

வாய்மேடு,

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகை மாவட்டம் தலைஞாயிறு தபால் நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட செயலாளர் சம்பந்தம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பேரூர் செயலாளர் சோமு.இளங்கோ, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story