திருச்சியில் மோதல் சம்பவம்: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 28 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
திருச்சியில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 28 பேரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி,
திருச்சி பிராட்டியூரில் ஆக்ஸ்போர்டு என்ஜினீயரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் கல்லூரி வளாகத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு மாணவிகளை கேலி கிண்டல் செய்துள்ளனர். இதை அதே பிரிவில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் தட்டிக்கேட்டு, மாணவிகளை கிண்டல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் கல்லூரியில் நேற்று முன்தினம் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் அஞ்சலி செலுத்திய பின் வகுப்பறைக்கு சென்றனர். அப்போது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் அதே வளாகத்தில் மாணவிகளை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அம்மாணவர்களை 4-ம் ஆண்டு மாணவர்கள் எச்சரித்தனர். பின்னர் அவர்கள் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்கு சென்றுவிட்டனர்.
அங்கு சென்ற 3-ம் ஆண்டு மாணவர்கள் சிலர், 4-ம் ஆண்டு மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டைகளாலும், பீர் பாட்டிலாலும் தாக்கிக்கொண்டனர். இந்த மோதல் கல்லூரி வளாகத்தில் தொடங்கி ரோட்டின் வெளியே வரை நடந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விரைந்து சென்றுமோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 28 மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இந்த மோதல் சம்பவத்தில் 6 மாணவர்களின் மண்டை உடைந்தது. மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தால் நேற்று முன்தினம் மாலை கல்லூரி வளாகத்திலும், வெளியேயும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதலில் எச்சரிக்கை செய்து அனுப்பி விடலாம் என போலீசார் முடிவு செய்திருந்தனர். ஆனால் மோதல் சம்பவம் பெரிய அளவில் நடந்ததால் போலீஸ் உயர்அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், எடமலைப்பட்டிபுதூர் இன்ஸ்பெக்டர் நிக்சன் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்குப்பதிவுக்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.
இதற்கிடையில் இரவில் மாணவர்களின் பெற்றோர், வக்கீல்களுடன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். மேலும் சக மாணவர்களும் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது, கல்லூரி வளாகத்தில் நடந்த சம்பவத்துக்கு மாணவர்களை எப்படி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரலாம் என்று பெற்றோர் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நள்ளிரவில் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் மோதல் சம்பவத்தில் பலர் காயமடைந்திருப்பது குறித்து பெற்றோரிடம் போலீசார் எடுத்துக்கூறினர். மேலும் படிக்கும் மாணவர்கள் கட்டைகள், கம்புகளாலும், பீர் பாட்டிலாலும் தாக்கியதை போலீசார் தெரிவித்தனர். இதனால் மாணவர்களின் பெற்றோர் செய்வதறியாமல் திகைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இறுதியாண்டு படிக்கும் மாணவரான சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த முருகானந்தம் (வயது 21) மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் திருச்சியை சேர்ந்த ஆனந்த் என்கிற ஆனந்த கிருஷ்ணன் (20), ஷியாம் சுந்தர் (19), மோகன் பிரசாத் (19), தட்சிணாமூர்த்தி (19), தவமணி (19), நவீன் (19), ஸ்ரீராம் (20), திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த வேல்முருகன் (20), நாகை மாவட்டம் அனந்தநல்லூரை சேர்ந்த விக்னேஸ்வரன் (19), தென்காசியை சேர்ந்த பிரதாப் ராஜ் (20), பொன்ராஜ் (20), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முத்துபாண்டி (20), நெல்லையை சேர்ந்த கார்த்திக் (19), பாளையங்கோட்டையை சேர்ந்த பிரவீன் (19), விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த விக்னேஷ் (19), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த கலைச்செல்வன் (21), ஈரோடு எலம்பாளையம் பொன் நித்யானந்தம் (20) ஆகிய 17 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
இதேபோல மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முத்துபாண்டி (20) 4-ம் ஆண்டு மாணவர்கள் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் திருச்சியை சேர்ந்த சரத்குமார் (21), தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடை சேர்ந்த கவுன்ராஜ் (21), ரட்சகன் (21), திருவையாறு சூர்யா (21), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த முருகானந்தம் (21), தேவகோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரன் (21), ராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டையை சேர்ந்த லட்சுமண பாரதி(22), தொண்டியை சேர்ந்த குணா (21), ராமநாதபுரத்தை சேர்ந்த மாதவன் (19), ராஜதுரை (21), தென்காசியை சேர்ந்த கணேசன் (21) ஆகிய 11 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மொத்தத்தில் இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து 28 மாணவர்களையும் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் திருச்சி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வீட்டில், மாஜிஸ்திரேட்டு சோமசுந்தரம் முன் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது கைதான மாணவர்களை வருகிற 2-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
அதன்படி 28 பேரையும் பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அதிகாலை 4 மணி அளவில் போலீசார் அடைத்தனர். மாணவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதும் அவரது வீட்டின் வெளியே சற்று தள்ளி காத்திருந்த அவர்களது பெற்றோர் சிலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் சிலர் ‘ரூட் தல’ பிரச்சினையில் மோதிக்கொண்ட சம்பவம் அடங்குவதற்குள் திருச்சியில் என்ஜினீயரிங் கல்லூரியில் சீனியர், ஜூனியர் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கைதான மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story