மார்த்தாண்டம் அருகே முன்னாள் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை


மார்த்தாண்டம் அருகே முன்னாள் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 29 July 2019 4:45 AM IST (Updated: 29 July 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே முன்னாள் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரசகுமார் (வயது 60). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் நல்லூர் பேரூராட்சி கவுன்சிலராக வெற்றிபெற்று பதவி வகித்தார். தற்போது பா.ஜனதா முன்னாள் ராணுவ வீரர் நலப்பிரிவில் மாவட்ட துணை தலைவராக இருந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக சரசகுமார் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் அவர் நேற்று காலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சரசகுமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார், சரசகுமாரின் பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story