அரியலூரில் வீடு கேட்டு துப்புரவு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
அரியலூரில் இலவச வீடு கேட்டு துப்புரவு பணியாளர்கள் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினயிடம் மனு கொடுத்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 593 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெற்றார். பின்னர் அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில் அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், அரியலூர் நகராட்சியில் 45 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். ஆனால் எங்களுக்கென இதுவரை அரசு சார்பில் வீட்டுமனை வழங்கவில்லை. எனவே அரியலூர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி, இலவச வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இடிந்து விழும் நிலையில்...
இதேபோல் த.பழூர் ஒன்றியம், பெருமாள் தீயவனூர் காலனி தெருவில் வசிப்பவர்கள் அளித்த மனுவில், கடந்த 1985-ம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வீடுகளை சீரமைக்க பலமுறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் இதுநாள்வரை சீரமைக்கப்படவில்லை. தற்போது பெய்த மழையில் வீடுகள் ஒழுகுகின்றன. எனவே மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு தொகுப்பு வீடுகளை பழுது நீக்கி தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நான்கு வழிச்சாலையாக செப்பனிட வேண்டும்
பாளையப்பாடி சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு அளித்த மனுவில், மேற்கு பகுதி கொள்ளிடத்தில் இருந்து தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கோவிலூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அருகில் உள்ள 470 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்டராதித்தம் பெரிய ஏரி வேட்டை குடியேறி மற்றும் 30 சிறிய ஏரிகள் பயன்பெறும் வகையில், திருமழபாடி கொள்ளிடத்தில் கதவுடன் கூடிய தடுப்பணை கட்டினால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும். எனவே அங்கு தடுப்பணை கட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மேலும் திருச்சி முதல் சிதம்பரம் வரையிலான சாலை தற்போது 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் முதல் ஜெயங்கொண்டம் 4 ரோடு வரையிலான 40 கிலோ மீட்டர் சாலை இருவழிச்சாலையாக மட்டுமே அமைக்கப் படுவதாக தெரிகிறது. இதனை நான்கு வழிச்சாலையாக அமைக்க வேண்டும் என்று கீழப்பழுவூர், வி.கைகாட்டி, புதுப்ாபளையம் உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து மனு அளித்தனர்.

Related Tags :
Next Story