மதுராந்தகத்தில் கணவன், மனைவியை கத்தியால் வெட்டி 7 பவுன் நகை பறிப்பு


மதுராந்தகத்தில் கணவன், மனைவியை கத்தியால் வெட்டி 7 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 31 July 2019 4:15 AM IST (Updated: 30 July 2019 10:10 PM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகத்தில் கணவன், மனைவியை கத்தியால் வெட்டி 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மேலவலம்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). எலெக்ட்ரீசியன். நேற்று முன்தினம் இவர் தனது தந்தை, மனைவி ஜெகதா, மகள்கள் வினோதினி, மாசினி ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்மநபர்கள் 4 பேர் கத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களிடம் பணம், நகை கேட்டு அவர்களை சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் சீனிவாசனுக்கு தலை, கழுத்து மற்றும் கை அவரது மனைவி ஜெகதாவுக்கு கையில் வெட்டு விழுந்தது.

பின்னர் கொள்ளையர்கள் ஜெகதா அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டனர்.

பின்னர் அனைவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து சீனிவாசன் மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story