முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் விழாவில் பால்குட ஊர்வலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் கொடை விழாவில் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடை விழா கடந்த 28-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் போன்றவை நடந்தன.
நேற்று ஆரல்வாய்மொழி அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடங்கள் எடுத்து வந்தனர்.
அன்னதானம்
மேலும் பக்தர்கள் முளைப்பாரி, வேல் காவடி, பறவை காவடி, சூர்ய காவடி ஆகியவற்றுடன் ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலம் வடக்கூர், வணிகர் தெரு சந்திப்பு, எம்.ஜி.ஆர்.நகர், மருத்துவர் நகர், மூவேந்தர் நகர் வழியாக ஆலமூடு கோவிலை வந்தடைந்தது. வழி நெடுகிலும் ஆங்காங்கே பக்தர்களுக்கு மோர், பழவகைகள் வழங்கப்பட்டன.
ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும், அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளின் பாயாச குளியல், அலங்கார தீபாராதனை நடந்தது. இதற்கிடையே காலை முதல் அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
மாலையில் அக்கினி சட்டி எடுத்தலும், அதனை தொடர்ந்து அம்மன் தேரில் பவனி வருதலும் நடைபெற்றது. இரவு பூப்படைப்பும், அதனைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதனை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். விழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்பட்டன.
மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story