திருவாரூரில் பிளஸ்-1 மாணவருக்கு கத்தரிக்கோல் குத்து சக மாணவர் கைது


திருவாரூரில் பிளஸ்-1 மாணவருக்கு கத்தரிக்கோல் குத்து சக மாணவர் கைது
x
தினத்தந்தி 31 July 2019 3:45 AM IST (Updated: 31 July 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் பிளஸ்-1 மாணவரை கத்தரிக்கோலால் குத்தியதாக சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள ஆண்டிபாளையம் புதுத்தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி. இவருடைய மகன் முகமது பைசல்(வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இவருடன் படித்து வந்த சக மாணவர் ஒருவருக்கும் முகமது பைசலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று மாலை பள்ளி முடிந்த பின்னர் முகமது பைசல் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சக மாணவர் தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் முகமது பைசலை சரமாரியாக குத்தினார்.

கைது

இதில் தலை, நெஞ்சு, நெற்றியில் காயமடைந்த முகமது பைசலை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பைசலை கத்தரிக்கோலால் குத்திய மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர் முகமது பைசல் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவக்கல்லுரி முன்பு கூடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story