பிரதமர் மோடியுடன் சிவசேனா எம்.பி.க்கள் சந்திப்பு பயிர் காப்பீடு திட்டத்தின் குளறுபடிகளை நீக்க வலியுறுத்தல்


பிரதமர் மோடியுடன் சிவசேனா எம்.பி.க்கள் சந்திப்பு பயிர் காப்பீடு திட்டத்தின் குளறுபடிகளை நீக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 July 2019 11:15 PM GMT (Updated: 30 July 2019 10:35 PM GMT)

பிரதமர் மோடியை சிவசேனா எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசினர்.

மும்பை, 

பிரதமர் மோடியை சிவசேனா எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசினர்.

பிரதமருடன் சந்திப்பு

பிரதம மந்திரியின் கிசான் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் மும்பையில் பேரணி நடத்தினார்.

இந்தநிலையில் அவரது கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகள் குறித்து விளக்கி கூறினர்.

குறிப்பாக மராட்டியத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் போதுமான இழப்பீடு கிடைக்கவில்லை என்றும் பிரதமரிடம் புகார் தெரிவித்தனர்.

மாவட்ட அளவில்...

இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த நாடாளுமன்ற சிவசேனா குழு தலைவர் வினய் ராவத் கூறுகையில், விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயிர் இழப்பீடு முந்தைய 5 ஆண்டுகளில் சிறந்த பயிர் மகசூல் அடிப்படையில் இருக்க வேண்டும், என்றார்.

இதுபற்றி புல்தானா தொகுதி எம்.பி. பிரதாப் ராவ் ஜாதவ் கூறுகையில், காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை தாலுகா மற்றும் மாவட்ட அளவில் அமைக்க வேண்டும். இதனால் விவசாயிகள் தங்கள் இழப்பீடுகளை கேட்டுபெற உதவிகரமாக இருக்கும், என்றார்.

Next Story