திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவருக்கு வெட்டு; 5 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவருக்கு கத்தி வெட்டு விழுந்தது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த தொழுவூரை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் அஜித்குமார் (வயது 28). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் அஜித்குமார் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், அஜித், மற்றொரு அஜித், பிரவீன் உள்பட 5 பேர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அஜித்குமாரை தகாத வார்த்தையால் பேசி அவரை கட்டையால் தாக்கினர். பின்னர் அவரை கத்தியால் வெட்டிவிட்டு அவரது ஆட்டோவையும் சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.
இது குறித்து ஆட்டோ டிரைவர் அஜித்குமார் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகரை சேர்ந்தவர் ஸ்ரீராமன் (50). அதே பகுதியில் முத்து என்பவருக்கு சொந்தமான 2 கடைகளை வாடகைக்கு எடுத்து டி.வி. பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீராமன், அந்த கடைக்கு வாடகை தரமுடியாமல் கடையை பூட்டி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்து, தேவதாஸ் உள்பட 6 பேர் அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதை ஸ்ரீராமன் தட்டி கேட்டபோது தேவதாஸ் மற்றும் முத்து ஆகியோர் சேர்ந்து அவரை தகாத வார்த்தையால் பேசி, கையால் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஸ்ரீராமன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தேவதாஸ், முத்து உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் முகமதுஅலி தெருவை சேர்ந்தவர் நசீர்பாஷா. இவரது மனைவி மும்தாஜ் (42). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த முகமதுஷெரீப் (71), ஷன்மா(50) ஆகியோர் ரூ.90 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு அவர்கள் சொன்ன தேதிக்குள் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதை அறிந்த மும்தாஜ் தான் கொடுத்த பணத்தை கேட்டபோது பணம் தர மறுத்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மும்தாஜ் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி தீபா (37). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர். அவரது மனைவி ஹேமமாலினி ஆகியோர் குடும்ப செலவுக்காக பணம் வாங்கினர். தீபா தான் கொடுத்த பணத்தை கேட்டபோது சந்திரசேகரும், ஹேமமாலினியும் அவரை தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்து மிரட்டி உள்ளனர்.
இது குறித்து தீபா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சந்திரசேகர், ஹேமமாலினி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story