ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்,
கோட்டூர் அருகே புழுதுகுடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனே ஊரை விட்டு வெளியேற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்காக கையகப்படுத்திய விளை நிலங்களை விவசாயிகளிடம் சீர்செய்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சோழங்கநல்லூரில் போராட்டக்குழு சார்பில் விளக்க கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் ராஜ்பாலன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தவமணி, செல்வம், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காவிரி உரிமை மீட்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிச்செல்வன், நிர்வாகிகள் சோமஇளங்கோவன், தனபாலன், சுப்பிரமணியன், சேகர், இளங்கோவன், முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். அதனை தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக பேராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story