கம்பம் அருகே, புதர் மண்டிய முல்லைப்பெரியாறு தடுப்பணை


கம்பம் அருகே, புதர் மண்டிய முல்லைப்பெரியாறு தடுப்பணை
x
தினத்தந்தி 5 Aug 2019 4:30 AM IST (Updated: 5 Aug 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் தடுப்பணையில் செடிகள் ஆக்கிரமித்து புதர்மண்டி இருப்பதை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம், 

தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுரங்கபாதையின் வழியாக வந்து ராட்சத குழாய்கள் மூலம் லோயர்கேம்பை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து முல்லைப்பெரியாற்றின் வழியாக வைகை அணைக்கு செல்கிறது. இந்த தண்ணீரின் மூலம் லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிப்பட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக நெல் சாகுபடி நடக்கிறது. இதற்கிடையே நிலத்தடி நீரை சேமிப்பதற்காக முல்லைப்பெரியாற்றில் குறுக்கே பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கம்பம் அருகேயுள்ள தொட்டம்மன்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கின்றன. இதனால் தடுப்பணையில் தண்ணீர் தேங்காமல் செல்வதால் அப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.

எனவே தடுப்பணையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, தடுப்பணைகளை ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால் இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் முல்லைப்பெரியாற்றில் உள்ள பல தடுப்பணைகள் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. முல்லைப்பெரியாற்றில் தடுப்பணையில் ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றினால் கூடுதல் தண்ணீர் தேக்கலாம். இதன் மூலம் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்றனர்.

Next Story