மோட்டார் சைக்கிளில் மோதியதாக தம்பதி மீது தாக்குதல் - 2 வாலிபர்கள் கைது
மோட்டார் சைக்கிளில் மோதியதாக தம்பதி மீது தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
தேனி அரண்மனைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் கமலசேகரன் (வயது 50). இவருடைய மனைவி பவானி. நேற்று முன்தினம் இருவரும் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன், முத்துப்பாண்டி ஆகியோர் தவறி கீழே விழுந்தனர். இதனை பார்த்த தம்பதியினர் அவர்களுக்கு உதவி செய்வதற்காக சென்றனர். அப்போது அவர்கள் தான் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறி லட்சுமணன், முத்துப்பாண்டி (25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராமர் (27), சுப்பிரமணி ஆகியோர் கமலசேகரனையும், அவருடைய மனைவியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கமலசேகரன் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாழிசை செல்வன் வழக்குப்பதிவு செய்து ராமர், முத்துப்பாண்டி ஆகிய 2 பேரை கைது செய்தார். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story