கிராமமக்கள் சொந்த செலவில் ஏரியை தூர்வாரும் பணி தொடங்கியது


கிராமமக்கள் சொந்த செலவில் ஏரியை  தூர்வாரும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 6 Aug 2019 3:30 AM IST (Updated: 6 Aug 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் காவிரி பாசன பகுதி உள்ளது.

கீரமங்கலம்,

கடந்த சில ஆண்டுகளாக காவிரி தண்ணீரும் வரவில்லை, ஹைட்ரோ கார்பன் போராட்டம், புயல் பாதிப்பு என்று அடுத்தடுத்து நெடுவாசல் சுற்றியுள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீர்நிலைகளை உயர்த்த வேண்டும். நீர்நிலைகளை உயர்த்தி பழைய முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கிராம இளைஞர்களின் முயற்சியால் நெடுவாசல் நீர்மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக காணாமல் போன கல்லணை பாசன வாய்க்காலை கடந்த ஆண்டு மீட்ட இளைஞர்கள், களம் ஏரி தூர்வாராமல் இருப்பதால் தண்ணீரை நிரப்ப முடியாமல் தவித்தனர். இதனால் இந்த ஆண்டு குளம், ஏரிகளில் தண்ணீரை நிரப்ப ஏற்படுத்தப்பட்ட நீர்மேலாண்மை குழுவினரின் முதல் பணியாக சுமார் 110 ஏக்கர் பரப்பளவுள்ள முடுக்கவயல் நெடுவாக்குளம் ஏரியை தூர்வார திட்டமிட்டனர்.

இந்நிலையில் கிராமமக்கள் சொந்த செலவில் நெடுவாக்குளம் ஏரி தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து பணிகள் தொடங்கிய நிலையில், குளங்களை தூர்வாரி சீரமைத்து மழை தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவோம். நிலத்தடி நீரை சேமிப்போம் என்ற நம்மாழ்வாரின் கூற்றுப்படி மழை நீரை சேமிக்க நெடுவாக்குளத்தை தூர்வாருவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு தூர்வாரும் பணிகள் தொடங்கியது.

Next Story