கனமழை எதிரொலி குடகு மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட் விராஜ்பேட்டை-கேரளா சாலையில் மண்சரிவு
கனமழை எதிரொலியால் குடகு மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டு உள்ளது. விராஜ்பேட்டையில் இருந்து கேரள செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சிவமொக்கா,
கர்நாடகத்தில் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தது. முதலில் தென்கர்நாடக பகுதிகளான சிவமொக்கா, குடகு, மங்களூரு, சிக்கமகளூரு, பெங்களூரு உள்பட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் இந்த பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென்கர்நாடக பகுதிகளில் மழை குறைந்தது. ஆனால் மராட்டிய மாநிலத்தில் ஆரம்பித்த தென்மேற்கு பருவமழையால் வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் தற்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. அவர்களை வீடுகளை விட்டு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தென்கர்நாடக பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கோணிகொப்பா, ஐயங்கேரி, விராஜ்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டு உள்ளது. விராஜ்பேட்டையில் இருந்து மாகுட்டா வழியாக கேரள மாநிலம் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியை கலெக்டர் அனீஷ் கண்மணி ஜாய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவிரி ஆற்றின் பிறப்பிடமான பாகமண்டலாவில் உள்ள தலைக்காவிரியிலும் பெய்யும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கனமழையையொட்டி நேற்று(திங்கட்கிழமை) முதல் நாளை(புதன்கிழமை) வரை குடகு மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும், 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஆரஞ்ச் அலார்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story