முதுகுளத்தூர் அருகே அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி பெற்றோர் போராட்டம்


முதுகுளத்தூர் அருகே அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி பெற்றோர் போராட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2019 4:15 AM IST (Updated: 6 Aug 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள வெண்ணீர் வாய்க்கால் அரசு ஆரம்பப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை 56 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். இவர் ஒருவர் மட்டுமே அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் பாடம் நடத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து இப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் முதுகுளத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் ராமநாதன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story