தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் 14 பெண்கள் உள்பட 60 பேர் மீது வழக்கு
தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்காததை தொடர்ந்து 14 பெண்கள் உள்பட 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தஞ்சாவூர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் என்.குருசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மாலதி, நம்பிராஜன், பாஸ்கர், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம், முத்தலாக் சட்டம், தேசிய நதிநீர் சட்டம், தேசிய மருத்துவ சட்டம், தொழிலாளர் உரிமை பறிப்பு சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதைக் கண்டித்தும், மத்திய அரசின் அடக்குமுறை, உரிமை பறிப்பு சட்டங்களை கண்டித்தும் அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜீவகுமார், செந்தில்குமார், கண்ணன், சுரேஷ்குமார், தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
60 பேர் மீது வழக்கு
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் பிரிவு 143 (சட்ட விரோதமாக கூடுவது), 341 (பணி செய்ய விடாமல் தடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் 14 பெணகள் உள்பட 60 பேர் மீது தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Tags :
Next Story