ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்களுக்கு குடும்ப நல பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும்


ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்களுக்கு குடும்ப நல பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Aug 2019 10:30 PM GMT (Updated: 6 Aug 2019 9:01 PM GMT)

ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்களுக்கு குடும்ப நல பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

ஸ்ரீரங்கம்,

ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில சிறப்பு தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீரங்கம் திருக்கோவில் பணியாளர் சங்க துணைத்தலைவர் சீனிவாசரெங்கன், கிளைத்தலைவர்கள் அய்யாசாமி, ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செய லாளர் சந்திரசேகரன் ஆண்டறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில தலைவர் சொக்கலிங்கம், முதுநிலை திருக்கோவில் பணியாளர் சங்க துணைச் செயலாளர் சுதர்சனம், ஸ்ரீரங்கம் திருக்கோவில் பணியாளர் சங்க தலைவர் பழனிச்சாமி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். கூட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டுக்கு முன்பு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் இதுநாள் வரை வழங்கப்படவில்லை. அதனை வழங்க வேண்டும். 2016, 2017, 2018-ம் ஆண்டுகளில் ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களுக்கு துறைநிலையான ஓய்வூதியம் பெற காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க பழைய படிவங்களை நேரடியாக அந்தந்த கோவிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களுக்கு குடும்ப நல பாதுகாப்பு நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். பொங்கல் கருணை தொகை வழங்க வேண்டும். மருத்துவப்படி மாதந்தோறும் ரூ.100 வழங்க வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பெரியண்ணன் நன்றி கூறினார். 

Next Story