புதுக்கோட்டை அருகே கோர விபத்து: கார்கள் அடுத்தடுத்து மோதல்; பெண்கள் உள்பட 5 பேர் பலி
புதுக்கோட்டை அருகே கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். மேலும் 4 குழந்தைகள் உள்பட 18-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கீரனூர்,
புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் சாலையில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை நோக்கி நேற்று மாலை 4¼ மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரை கீரனூரை அடுத்துள்ள துடையூரை சேர்ந்த சிதம்பரம் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்புறம் வலது பக்க டயர் திடீரென வெடித்தது. இதையடுத்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் கவிழ்ந்தது.
அப்போது திருச்சி மற்றும் புதுக்கோட்டையை நோக்கி அதிவேகமாக இருபுறமும் வந்த 6 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக பலத்த சத்தத்துடன் மோதின. இதில் சில கார்கள் சாலையோரத்தில் கவிழ்ந்தன. இதில் கார்களில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் அபயக் குரல் எழுப்பினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது எந்த காரில் உள்ளவர்கள் சத்தம் போடுகிறார்கள் என்பது தெரியாமல் திணறினர்.
இந்த விபத்தில் சிதம்பரம், கீரனூரை அடுத்துள்ள உடையாளிப்பட்டியை சேர்ந்த ரெங்கராஜ் (32), திருமயத்தை அடுத்துள்ள வேகுபட்டியை சேர்ந்த நாகரத்தினம் (78), செல்வம் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 குழந்தைகள் உள்பட 18-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து வந்தன. இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வாகனங்களில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காரைக்குடியை சேர்ந்த நாகலட்சுமி (57) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தால் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையோரத்தில் கவிழ்ந்து கிடந்த காரை பொக்லைன் எந்திரம் மூலம் பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.
மேலும் விபத்துக்குள்ளான கார்களையும் சாலையோரத்திற்கு கொண்டு சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். இதையடுத்து புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story