சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு கவர்னர் கிரண்பெடி இரங்கல்
சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு கவர்னர் கிரண்பெடி இரங்கல் தெரிவித்தார்.
புதுச்சேரி,
முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவினையொட்டி கவர்னர் கிரண்பெடி இரங்கல் செய்தி விடுத்துள்ளார். அதில் ‘சுஷ்மா சுவராஜின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. வெளிநாடுகளில் மக்கள் தவிக்கும்போது புதுவைக்கு உதவி செய்வதில் தனிப்பட்ட முறையில் அவர் கவனம் செலுத்தினார். அவரது மறைவு தேசத்துக்கு பேரிழப்பு. சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
அமைச்சர் ஷாஜகான் விடுத்துள்ள செய்தியில், ‘ஒரு திறமையான தலைவரை நாடு இழந்துவிட்டது மிகவும் வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நாடெங்கும் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவரது ஆன்மா இறைவன் அருளால் இளைப்பாற ஆண்டவனை வேண்டு கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Tags :
Next Story