மாவட்ட செய்திகள்

மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம் + "||" + Medical college student-students struggle with black hair

மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம்
தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கான சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்தநிலையில் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கக்கூடாது. இந்திய மருத்துவ கவுன்சிலை ஒழிக்கக்கூடாது. நெக்ஸ்ட் தேர்வை திணிக்க கூடாது. வரைவு தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.

கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

இந்தநிலையில் நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படிக்கும் மருத்துவ மாணவ-மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து, கண்களில் கருப்புத்துணி கட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்களது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணின் இடுப்பில் இருந்த 4½ கிலோ கட்டி அகற்றம் அரசு டாக்டர்கள் சாதனை
பெண்ணின் இடுப்பில் இருந்த 4½ கிலோ கட்டி அகற்றம் அரசு டாக்டர்கள் சாதனை.
2. நாமக்கல் அருகே, செல்போன் கோபுரம் அமைக்க பெண்கள் எதிர்ப்பு - சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்குவதற்கு எதிராக வாக்களித்த இங்கிலாந்து மக்கள்
இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து அரசின் வலைத்தளத்தில் இங்கிலாந்து மக்கள் வாக்களித்துள்ளனர்.
4. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
5. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடந்தது
கும்பகோணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.