உதவி செய்வதுபோல் நடித்து ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதன கொள்ளை 2 பேர் கைது
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வருபவர்களிடம் உதவி செய்வதுபோல் நடித்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு எல்லையம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு ஏ.டி.எம். வாசலில் சந்தேகத்துக்கு இடமாக வடமாநில வாலிபர்கள் 2 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது ரூ.15 ஆயிரம் இருந்தது.
இதுபற்றி போலீசார் விசாரித்தபோது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள் பீகார் மாநிலத்தைச்சேர்ந்த துர்கேஷ் பண்டிட் (வயது 28) மற்றும் பிரமோத் (29) என்பதும், அத்திப்பட்டு புதுநகரில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நிற்பார்கள்.
அப்போது ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வருபவர்களிடம் அவர்களுக்கு உதவி செய்வதாக கூறி, ஏ.டி.எம். கார்டு மற்றும் ரகசிய எண்ணை வாங்கி பணம் எடுப்பதுபோல் நடிப்பார்கள். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று கூறி தங்களிடம் இருக்கும் போலி ஏ.டி.எம். கார்டுகளை அவர்களிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.
அவர்கள் சென்ற பிறகு அந்த கார்டு, ரகசிய எண்ணை பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரிந்தது.
மேலும் இவர்கள், ஏ.டி.எம். எந்திரம் மூலம் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய வருபவர்களிடமும் உதவி செய்வதுபோல் நடித்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி திருடியதும் தெரிந்தது.
இவ்வாறு எம்.கே.பி. நகரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் டெபாசிட் செய்ய வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சித்திக் என்பவரிடம் நைசாக பேசி ரூ.15 ஆயிரத்தை திருடியதும் தெரிந்தது.
இதையடுத்து துர்கேஷ் பண்டிட், பிரமோத் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story