வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 10 Aug 2019 3:00 AM IST (Updated: 10 Aug 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி,

குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் அருமையாக உள்ளது. கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

நேற்று காலையிலும் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. இதனால் புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளித்தனர்.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 1 மணிக்கு அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதித்தனர். ஆனால் மெயின் அருவியில் ஒட்டுமொத்தமாக அனைவரும் அனுமதிக்கப்படவில்லை.

ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக சிறிது சிறிதாக அனுப்பப்பட்டனர். அவர்கள் ஆனந்தமாக குளித்து சென்றனர். இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.

Next Story