முதல்-அமைச்சர் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம்,
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 7-ந்தேதி இரவு தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்து உள்ளதாகவும், அது உடனடியாக வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
பின்னர் அரை மணிநேரம் கழித்து மீண்டும் அந்தநபர் தொடர்ந்து 19 முறை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு முதல்- அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்பை அதிகரித்தனர்.
மேலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்மநபரின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தாம்பரம் அடுத்த சேலையூர் பராசக்தி நகர், 2-வது தெருவை சேர்ந்த கார் டிரைவர் வினோத்குமார் (வயது 33) என்பது தெரியவந்தது.
இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் அளித்த தகவலின்பேரில் சேலையூர் போலீசார் நேற்று வினோத்குமாரை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், குடிபோதையில் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
கைதான வினோத்குமாருக்கும், அவருடைய மனைவி திவ்யா(30)வுக்கும் கடந்த மாதம் தகராறு ஏற்பட்டது. இதில் வினோத்குமார் மீது தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் திவ்யா புகார் செய்தார்.
இதுதொடர்பாக விசாரணைக்கு வரும்படி மகளிர் போலீசார் அழைத்ததால் மனமுடைந்த வினோத்குமார், கடந்த மாதம் 28-ந்தேதி குடிபோதையில் தனது செல்போனில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து சேலையூர் போலீசார் வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 5-ந்தேதிதான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த 2 நாட்களில் மீண்டும் குடிபோதையில் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story