திருச்சி அருகே தண்டவாள பராமரிப்பு பணி: ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், ஈரோடு ரெயில்கள் தாமதம்
திருச்சி அருகே தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், ஈரோடு பயணிகள் ரெயில்கள் தாமதமானது. இதனால் ரெயில் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மலைக்கோட்டை,
திருச்சி அருகே பழூருக்கும், எலமனூருக்கும் இடையே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு மற்றும் மின்பாதை பராமரிப்பு பணி நேற்று மதியத்திற்கு மேல் நடந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரெயில் நேற்று மாலை புறப்பட்டு ஜங்ஷனை அடுத்த கோட்டை ரெயில் நிலையத்திற்கு மாலை 4.35 மணி அளவில் சென்றடைந்தது. அதன்பின் அந்த ரெயில் கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 5.40 மணி அளவில் கோட்டை ரெயில் நிலையம் வந்தது. அந்த ரெயிலும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பராமரிப்பு பணியின் காரணமாக ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்ட விவரம் பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. ரெயில்கள் நீண்ட நேரம் நின்றதால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். இதனால் கோட்டை ரெயில் நிலைய அதிகாரி அலுவலகத்தை பயணிகள் முற்றுகையிட்டனர். மேலும் அங்கிருந்த ரெயில் நிலைய அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தை கேட்டனர். அப்போது பராமரிப்பு பணி நடைபெறுவதாகவும், பணி முடிந்து, ரெயில்களை இயக்க சிக்னல் அனுமதி கிடைத்ததும் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் நேற்று மாலை 7 மணி அளவில் பராமரிப்பு பணி முடிவடைந்தது. இதைதொடர்ந்து ரெயில்களை இயக்க சிக்னல் கொடுக்கப்பட்டன. அதன்பின் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 7.10 மணி அளவில் புறப்பட்டு சென்றது. அதன்பின் இரவு 7.35 மணி அளவில் ஈரோடு பயணிகள் ரெயில் புறப்பட்டது. 2 ரெயில்களை தொடர்ந்து திருச்சி- கரூர் பயணிகள் ரெயில் தாமதமாக இரவு 7.40 மணி அளவில் கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
ரெயில்கள் நீண்ட நேரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது குறித்து முன்கூட்டியே அறிவிப்பு எதுவும் தெரிவிக்கப்படாததால் பயணிகள் சிரமம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story