கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2019 4:00 AM IST (Updated: 11 Aug 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உத்தமபாளையம் அருகே உள்ள எம்.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் தில்பிரசாத் தலைமை தாங்கினார்.

எம்.துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது ஒரு விபத்து தொடர்பாக போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் இதுதொடர்பான ஒரு புகார் மனு அளித்தனர். இதேபோல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடமும் மனு கொடுத்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
1 More update

Next Story