திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திய 150 பேருக்கு அபராதம் - போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திய 150 பேருக்கு அபராதம் விதித்து போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து தாடிக்கொம்பு, மாலப்பட்டி, கோபால்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கும், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் திண்டுக்கல் வழியாக பழனி, கொடைக்கானலுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் இருக்கும்.
இந்த நிலையில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தப்படும் இடங்கள், பயணிகள் காத்திருக்கும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதிலும் இரவில் பஸ் நிலைய வளாகத்தில் அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உறவினர்களை பஸ் நிலையத்தில் இறக்கி விடுவதற்காக வந்தவர்கள், பஸ் நிலையம் அருகே உள்ள கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக வந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் பஸ் நிலைய வளாகத்திலேயே தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்கின்றனர். இதையடுத்து நேற்று இரவு 7 மணி அளவில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பஸ் நிலைய வளாகத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக 150 பேரின் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதையடுத்து அந்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களிடம் போலீசார் உரிய ஆவணங்களை காட்டும்படி கேட்டனர்.
அதில் பலருக்கு வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இருப்பதும், சிலர் ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் பஸ் நிலைய வளாகத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தியவர்களிடம், இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தார்.

Related Tags :
Next Story