மனித வாழ்க்கை நெறிமுறைகளை எளிமையாக கூறியவர் திருவள்ளுவர்: முதல்-மந்திரி எடியூரப்பா புகழாரம்
திருக்குறள் வழியாக மனித வாழ்க்கை நெறிமுறைகளை எளிமையாக கூறியவர் திருவள்ளுவர் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று புகழாரம் சூட்டினார்.
பெங்களூரு,
பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் திருவள்ளுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.
இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை நிறுவியதன் 10-ம் ஆண்டு நிறைவு விழா கர்நாடக தமிழர்களின் திருநாளாக கொண்டாட திருவள்ளுவர் சிலை குழு முடிவு செய்தது.
அதன்படி, திருவள்ளுவர் சிலை நிறுவியதன் 10-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவி 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இது பெருமைமிகு தருணம். கர்நாடகத்தில் 2009-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அல்சூரில் திருவள்ளுவர் சிலையை நிறுவினேன். இதேபோல் தமிழகத்தில் சர்வக்ஞர் சிலை நிறுவப்பட்டது.
சர்வக்ஞரை போல் திருவள்ளுவரும் ஆதி கவிஞர் ஆவார். மகாகவி திருவள்ளுவர் ஒவ்வொரு திருக்குறளிலும் 7 வார்த்தைகளை பயன்படுத்தி மனிதர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை எளிமையாக கூறியுள்ளார். அரசியல், இல்லறம் உள்பட அனைத்து பிரிவுகளையும் திருக்குறள் உள்ளடக்கி உள்ளது.
பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் தமிழர்களும், கன்னட மக்களும் பேதங்களை மறந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். சகோதர மனப்பான்மையுடன் ஒருதாய் மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஒற்றுமை தொடர கடவுளை பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் திருவள்ளுவர் சிலை குழு ஒருங்கிணைப்பாளரும், கர்நாடக அ.தி.மு.க. இணைச்செயலாளருமான எஸ்.டி.குமார் கூறுகையில், ‘திருக்குறளின் பெருமை, தமிழர்களின் உறவு முறை குறித்து எடியூரப்பா பேசியுள்ளார். எடியூரப்பாவின் கூற்றுப்படி கன்னட வாழ் தமிழர்கள் கன்னட மக்களுடன் பிணைந்து இருப்பார்கள். அதேநேரத்தில் வாழ்கிற பூமிக்கும் தமிழர்கள் விசுவாசமாக இருப்பதோடு, தமிழருக்கான கலாசாரத்தையும் பேணி காப்பார்கள். விழாவில் கலந்துகொண்ட கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நன்றி’ என்றார்.
விழாவில் பி.சி.மோகன் எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க், அல்சூர் வார்டு கவுன்சிலர் மமதா, அவருடைய கணவர் சரவணா, முன்னாள் தமிழ் சங்க தலைவர் தி.கோ.தாமோதரன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விழாவுக்கான ஏற்பாட்டை திருவள்ளுவர் சிலை குழுவினர் மேற்கொண்டு இருந்தனர்.

Related Tags :
Next Story