கனமழை எதிரொலி: கண்ணூர்-யஷ்வந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் இன்று ரத்து


கனமழை எதிரொலி: கண்ணூர்-யஷ்வந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் இன்று ரத்து
x
தினத்தந்தி 11 Aug 2019 11:40 PM GMT (Updated: 11 Aug 2019 11:40 PM GMT)

கனமழை காரணமாக, கண்ணூர்-யஷ்வந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு,

கர்நாடகம், மராட்டியம், கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி கண்ணூர்-யஷ்வந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டிஎண்:16528), மங்களூரு சென்டிரல்-யஷ்வந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16566), எர்ணாகுளம்-புனே எக்ஸ்பிரஸ் ரெயில் (11098) ஆகியவை இன்று (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுகின்றன.

இதுதவிர சத்ரபதி சாகு மகாராஜ் டெர்மினஸ் கோலாப்பூர்-மனுகுரு எக்ஸ்பிரஸ் ரெயில் (11304), சத்ரபதி சாகு மகாராஜ் டெர்மினஸ் கோலாப்பூர்-கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (16590) ஆகியவை கோலாப்பூர்-மீரஜ் இடையே இன்று இயங்காது. சத்ரபதி சாகு மகாராஜ் டெர்மினஸ் கோலாப்பூர்-திருவனந்தபுரம் சென்டிரல் எக்ஸ்பிரஸ் (16331) கோலாப்பூர்-சோலாப்பூர் இடையே இன்று இயங்காது.

மேற்கண்ட தகவல் தென்மேற்கு ரெயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story